திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 4 வயதுடைய மொஹமட் அக்லான் பிலால் என்ற மாணவன், 10இன் அடுக்குகளை அதன் 100ம் அடுக்குகள் வரை ஆங்கில மொழியில் கூறி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இயன்முறை மருத்துவர்களான மொஹமட் நஸ்மி மற்றும் பாதிமா பாசீஹா ஆகியோரது மகனே இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்னேஸ்வரராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. மொஹமட் பர்சான் ஆகியோர், சாதனையை உறுதி செய்தனர்.
சாதனை சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றனவும் வழங்கப்பட்டன.