அவுஸ்திரேலிய கிறிக்கெற் வீரரான அடம் சம்பா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 100 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.
99 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அடம் சம்பா இங்கிலாந்துக்கு எதிராக 12 போட்டிகளில் 21.57 சராசரியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முன்னாள் கப்டன் ஸ்டீவ் ஸ்மித் , சீமர் மிட்செல் ஸ்டார்க்கைத் தொடர்ந்து, தற்போதைய அவுஸ்திரேலிய அணியில் சதத்தை எட்டிய மூன்றாவது வீரர் ஆவார்.
நேதன் லியான் டோட் மர்பி, மிட்செல் ஸ்வெப்சன் ,மேத்யூ குஹ்னெமன் போன்ற அனைத்து வீரர்கள் பிரகாசிப்பதால் அடன் சம்பா டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற முடியாத நிலை உள்ளது.