33 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

100 மில்லியன் அகதிகள்

ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று உலக அகதிகள் தினத்தை அனுசரிக்கிறது.

உலக அளவில் 100 மில்லியன் அகதிகள் இருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 26.6 மில்லியனாகப் பதிவானதாய் நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உக்ரேனில் தொடரும் போர் மட்டுமின்றி, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றில் நிலவும் அரசியல் நெருக்கடிகளால் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அகதிகள் நெருக்கடி, இக்காலத்தின் கடுமையான குற்றம் என நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் Antonio Guterres வருணித்தார்.

இவ்வாண்டின் உலக அகதிகள் தினத்தின் கருப்பொருள் ‘பாதுகாப்பை நாடுவதற்கான உரிமை’ என்று தெரிவிக்கப்பட்டது.

உலகில் போர், பயங்கரவாதம், பட்டினி, வறுமை உட்பட பல காரணங்களால் மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘யாராக இருந்தாலும். எங்கிருந்தாலும். எப்பொழுதும் பாதுகாப்பைத் தேடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலகில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒருவர் அனைத்தையும் விட்டு வெளியேற நேர்கிறது. 2018 கணக்கின் படி 7 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் 3 கோடி பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles