இலங்கையில் புதிய அரசியலமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டுள்ள தருணத்தில் தற்போதுள்ள அரசியலமைப்பையும்; அதனோடிணைந்த 13-வது திருத்தச்சட்டத்தையும் நோக்கும்போது, வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வாக இருப்பதைவிட, இலங்கை அரசியலில் இந்தியா தனது பிடியைக்கொண்டிருப்பதற்கான ‘கடிவாளமாக’ 13-வது திருத்தச்சட்டம் இருந்துள்ளதே உண்மையாக இருக்கின்றது.
இவ்வருடத்துடன் 33 வருடங்களை 13-வது திருத்தச்சட்டத்துடன் கூடிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிறைவு செய்கிறது.
இந்த திருத்தச்சட்டத்தை முறியடித்து ‘வேதாளத்தை மீளவும் முருங்கையில் ஏறவைத்த’ பெருமை ஆயுத பலத்தினாலேயே எதனையும் சாதிக்கமுடியும் என்று நம்பிய தமிழீழ விடுதலைப்புலிகளையே சாரும்.
அன்றைய ஐனாதிபதி Nஐ. ஆர். ஐயவர்த்தன, அன்றைய இந்திய பிரதமர் ராஐPவ்காந்தியை வளைத்துப்போட்டு காரியம் பார்க்க முற்பட்டார்.
இக்கட்டத்தில் குறிக்கிட்ட தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர்கள் அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோர், திருச்சிராபள்ளி முதல் புதுடில்லிவரை ராஐPவுடன் விசேட விமானமொன்றில் பயணித்து அவருக்கு உண்மை நிலபரங்களை எடுத்துக் கூறியதன் விளைவாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கேற்ற விதத்தில் மெருகூட்டப்பட்டது.
இருந்தபோதிலும் ;மகாபாரத காவிய’ காலத்தில்; இருந்தே அபாராமாக இருந்து வரும் இந்திய ராஐதந்திரம், இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் கூடிய 13–வது திருத்தச்சட்டத்தை தனது இலங்கைக்குரிய கடிவாளமாக இந்தியா வைத்திருந்து வருவதையே தெளிவுற அறியமுடிகிறது.
பூட்டானின் திம்புப்பேச்சுவார்த்தையிலேயே இலங்கைத்தமிழ் அரசியலாளர்களின் ஒற்றுமையின்மையை இந்தியா நாடிபிடித்தறிந்திருந்தது. இவ்வகையில் தென்னாசியப்பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாக்கவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் 13- வது திருத்தச்சட்டத்தையும் ஒரு கடிவாளமாக இந்தியா வைத்துள்ளது.
இந்திய-இலங்கை தலைவர்கள் சந்திக்கும்போதெல்லாம் வெளிப்படும் முதல்விடயம் 13- வது திருத்தச்சட்டமும் அதன் அமுலாக்கமுமே.
இன்றைய பிரதமர் மஹிந்த ராஐபக்ஷ ஐனாதிபதியாக இருந்தபோது 13 -வது திருத்தத்துக்கு அப்பாலும் செல்லப்போவதாக இந்தியாவிடம் கூறியிருந்தார்.
இதுதவிர இலங்கையின் வடக்;;;கு-கிழக்கு தமிழ் அரசியலில் 13 -வது திருத்தச்சட்டம் கூட மூச்சுவிட சிரமப்படும் தமிழ் அரசியலாளர்களுக்கு ஒரு ‘ஒட்சிசன் வாயு’வாகவே இருக்கின்றது.
இந்த வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான சூழல்கள் பலமாக உள்ள நிலையில், ‘பாரதப்போரில்’ ‘கிருஷ்ணபிரான்’ தனது குதிரைகளின் கடிவாளத்தை லாவகமாக அங்குமிங்கும் அசைத்து தேரைச் செலுத்தியதுபோல இந்தியாவும், 13 -வது திருத்தச்சட்டத்துடன் கூடிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கையாளக்கூடிய சூழ்நிலைகளும் தெளிவாகவே தெரிகின்றன.
இதற்கென இலங்கை தமிழர் தரப்பை இந்தியா மீளவும் தனது நெறிப்படுத்துலுக்குள்ளாக்கலாம்.