“13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதுமே நீக்கப்படாது.அது மேலும் பலப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளில் கோட்டாபய அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பில் இந்தியாவுடனும் பேசவுள்ளோம்.”இப்படிக் கூறியிருக்கின்றார் யாழ்ப்பாணம் வருகை
தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட
செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பயன்படுத்துமே
தவிர அதில் மாற்றத்தைக் கொண்டுவர முயலாது என விவசாய அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்- எமது அரசில் 150க்கும் மேற்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்
ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட தமது கருத்துக்களைத் தெரிவித்து
வருகின்றனர்.
நாட்டின் பிரதமரோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ 13ஆவது
திருத்த சட்டத்தை நீக்குவோம் என்ற கருத்தை இதுவரை வெளியிடவில்லை.
அத்தோடு எமது அரசின் பேச்சாளரும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவோம்
என்று இதுவரை கருத்து கூறவில்லை.
இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு
நாம் நகரவேண்டும்.
தற்போது இந்தியாவுடனும்பேசி 13ஆவது திருத்தச் சட்டத்தைப்
பலப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய
வேலைத்திட்டத்தை இந்த அரசு முன்னெடுக்கும்-என்றார்.