16 வயது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்த ரோபோ

0
101

சவுதியில் 16 வயது சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது மருத்துவர்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல.

மருத்துவ மேற்பார்வையின் கீழ் இயங்கும் ரோபோ இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ரோபோ உதவியுடன் இதுபோன்ற சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்த 16 வயது சிறுமி இதய நோயாளி ஆவார்.

இந்த ரோபோவுக்கு மருத்துவர்கள் 3 நாட்களாக 7 முறை பயிற்சி அளித்து பின்னர் அறுவை சிகிச்சை செய்து மிக துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவத் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று.