20வது திருத்தத்தினை ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியே அரசாங்கம் முன்னெடுக்கும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொருத்தமற்றது என கருதப்படும் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் மூலம் மாற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மூலம் கருத்துக்கள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கையின் அடிப்படையிலேயே 19ஐ திருத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.