நாம், இந்த 20ஐ ஒரு போதும் நம்ப மாட்டோம்.
விசேடமாக 19இல் உள்வாங்கப்பட்டிருந்த மனிதாபிமான முகங்கள் மற்றும் ஜனநாயக அடையாளங்கள் 20இல் நலிவடைந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது.

19வது திருத்தத்திலிருக்கும் குறைபாடுகளை நாம் அறிவோம்.
அவ்வாறெனில் 19இலுள்ள குறைபாடுகளை திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக இவ்வாறு 20வது திருத்தத்தை கொண்டுவந்து, ஜனநாயக அடையாளங்களை நலிவடைய செய்ய கூடாது.
எனவே தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
எமது எதிர்ப்பை போல், மக்களின் எதிர்ப்பும் நேற்று (14) அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்பப்பிடுத்தியுள்ளது.
நான் கடந்த இரண்டு நாட்களாக, ஒரு விடயத்தை காண முடியுமாக இருந்தது.
அதாவது, அரச தரப்பினரும் கருத்து முரண்பாட்டை ஆரம்பித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார்.