அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்திற்குள் பிரச்சினை உருவாகியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக, அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு, கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (14), கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
20வது திருத்த சட்டம் தொடர்பான உரையாடல்கள், வேறொரு கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது.
அரசாங்கம், ஏனைய அனைத்து பிரச்சனைகளை கருத்திற்கொள்ளமாலே, 20வது திருத்தம் தொடர்பில், அவசரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
19வது திருத்தத்தை தூக்கியெறிந்து, 20ஐ அமைச்சரவைக்கு கொண்டுவந்து, அதனை வர்த்தமானிக்கு உற்படுத்தினர்.
அதேபோல், 20வது திருத்தத்தை கொண்டுவருவதன் மூலமே, ஏனைய அனைத்து பிரச்சனைகளுக்கும், தீர்மானமெடுக்க முடியுமெனவும் கூறினார்கள்.
இவ்வாறு அவசரமாக கொண்டுவரப்பட்ட 20வது திருத்தச்சத்திற்கு, ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம், எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
நாம், இந்த 20ஐ ஒரு போதும் நம்ப மாட்டோம்.
விசேடமாக 19இல் உள்வாங்கப்பட்டிருந்த மனிதாபிமான முகங்கள் மற்றும் ஜனநாயக அடையாளங்கள் 20இல் நலிவடைந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தானது.
19வது திருத்தத்திலிருக்கும் குறைபாடுகளை நாம் அறிவோம்.
அவ்வாறெனில் 19இலுள்ள குறைபாடுகளை திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக இவ்வாறு 20வது திருத்தத்தை கொண்டுவந்து, ஜனநாயக அடையாளங்களை நலிவடைய செய்ய கூடாது.
எனவே தான் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.
எமது எதிர்ப்பை போல், மக்களின் எதிர்ப்பும் நேற்று (14) அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையை ஏற்பப்பிடுத்தியுள்ளது.
நான் கடந்த இரண்டு நாட்களாக, ஒரு விடயத்தை காண முடியுமாக இருந்தது.
அதாவது, அரச தரப்பினரும் கருத்து முரண்பாட்டை ஆரம்பித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார்.
எதற்காக அந்த குழுவை நியமித்தனர்.
இந்த திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவை பேச்சாளர், யார் எதிர்த்தாலும் தாம் இந்த திருத்த்தை கொண்டுவருவோம் என கூறினார்.
ஆனால், இப்போது அந்த கருத்து போர்வை போர்த்தப்பட்டு, அரச தரப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
உண்மையில் இந்த 20வது குறித்து ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையால், இது அரசாங்கத்த்னுள் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்மை தெளிவாகிறது.
என குறிப்பிட்டுள்ளார்.