20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று (16) நடைபெறவுள்ளது.