24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

23 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன் அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles