கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தங்கியிருந்த 292 இலங்கையர்கள் நேற்று (14) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, ஜப்பானின் நரிட்டாவிலிருந்து 292 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (14) அதிகாலை 3.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேவேளை 64 இலங்கை மற்றும் வெளிநாட்டு மாலுமிகள் நேற்று (14) அதிகாலை 5.35 மணிக்கு கட்டாரின் டோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.