நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதன் நிமித்தம் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கதும் சவாலானதுமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் நவீன்.டீ.சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த காலப்பகுதியில் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர கூறியுள்ளார்.
அதேபோல்,பயணக்கட்டுபாடு விதிக்கப்படா விட்டால் சமூகத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பது கடினமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலான நிலையை கட்டுப்படுத்துவது எவ்வாறு அதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள சுகாதார திட்டங்கள் என்ன என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.