25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

62 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் 62 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகப் பல கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகியுள்ளன. பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்தாலும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதையடுத்து 20% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியதாவது:

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்தோம். இதன்மூலம் எங்களுடைய லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் செலவைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதற்காகச் சில முடிவுகளை எடுத்துள்ளோம். இதன்மூலம் செலவைக் குறைத்து நன்குச் சேமிக்க முடியும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒவ்வொரு பிரிவும் மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்குறைப்பு நடந்தால் மட்டுமே செலவைக் குறைத்து சேமிக்க முடியும். 

20% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளோம். இதன்மூலம் 62 பேர் வேலை இழப்பார்கள். தற்போது பணியாற்றி வருபவர்களின் பதவிகளிலும் மாற்றம் செய்யவுள்ளோம். இதன்மூலமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளோம். வருங்காலத்தில் கிரிக்கெட் நடவடிக்கைகளைப் பாதுகாக்க வழிவகுத்துள்ளோம். இதுதொடர்பான மேலதிக விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றார். 

Related Articles

யாழ்  நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றின் வடையில் கரப்பான்பூச்சி!

யாழ்  நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்று விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை  யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில்...

சுய விளம்பரத்திற்காக ஜனாதிபதி உழைக்கவில்லை – ரொமேஷ் டி சில்வா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுய விளம்பரத்திற்காக உழைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சட்ட வல்லுனர்களால் ஜனாதிபதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு...

உலகக்கோப்பை காற்பந்து: காலிறுதிக்கு அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுணட் ஒவ் 16 சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிஃபா உலகக்கோப்பை கால்பந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழ்  நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றின் வடையில் கரப்பான்பூச்சி!

யாழ்  நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்று விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை  யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில்...

சுய விளம்பரத்திற்காக ஜனாதிபதி உழைக்கவில்லை – ரொமேஷ் டி சில்வா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுய விளம்பரத்திற்காக உழைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சட்ட வல்லுனர்களால் ஜனாதிபதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு...

உலகக்கோப்பை காற்பந்து: காலிறுதிக்கு அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுணட் ஒவ் 16 சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிஃபா உலகக்கோப்பை கால்பந்து...

மலையகப்பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சாரதிகள் அவதானம்!

நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, வட்டவளை,...

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள...