ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் உதவி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.எம் சுபியான் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தனர்.