32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

90 வீத மாணவர்கள் எழுத்துகள், இலக்கங்கள் தொடர்பான அறிவில் மந்தம்

பாடசாலைகளில் தரம் 3 இல் கல்வி கற்கும் 90 வீதமான மாணவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான அறிவு இல்லை என கல்வி அமைச்சு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட் தொற்று காலத்தில் 26 வீதமான மாணவர்கள் இணையவழியிலான கற்றல் செயற்பாட்டில் ஈடுபடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்று பரவலால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுதுதல், அடிப்படை கணக்கு தொடர்பான அறிவு போன்றவற்றின் அடிப்படையில் கல்வி அமைச்சு நடத்திய ஆய்விலேயே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதன்படி, தரம் 3இல் பயிலும் 34 வீத மாணவர்களுக்கு மாத்திரமே எழுத்து அறிவும் 7 வீதமான மாணவர்களுக்கே எண்கள் தொடர்பான அறிவும் காணப்படுகின்றது.

இதேவேளை, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப் பகுதியில் 26 வீதமான மாணவர்கள் இணைய வழியில் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles