31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 4400

மட்டக்களப்பில் ரபிட் அன்டிஜன் பரிசோதனை (PHOTOS)

0

மட்டக்களப்பு முகத்துவாராம் மட்டிக்களி மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாராம் மட்டிக்களி மீன் சந்தையில் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்கத் தவறியவர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை இடம்பெற்றது.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள், பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகரால் 47 நபர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி சி ஆர் , மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

0

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை: மன்னாரில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்.

0

பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதியாக கிடைத்த பிசிஆர் பரிசோதனை முடிவின் படி நேற்றையதினம் 52 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆறு நாட்களாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50க்கு மேற்பட்ட தாக காணப்படுகின்றது அதே நேரத்தில் மொத்தமாக 2277 நபர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலைமை காணப்படுகின்றது

இன்றும் ஒரு கொரோனா மரணம் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது அறியக்கூடியதாக வுள்ளது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயி ரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது

இந்த நிலையிலே பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணி புரம் கிராமத்தினை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம் அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள்

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொடிகாமம் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது யாழில் தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 123 குடும்பங்களைச் சேர்ந்த 5249பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு ள்ளவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இடர் கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது

பிரதேச செயலகங்கள் ஊடாக அவை வழங்கப்பட்டு வருகின்றன இலங்கை பூராகவும் பயணத் தடை அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவே பயணத்தடை காலப் பகுதியிலே பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து பயண தடையினை அனுசரித்து செயற்படவேண்டும்.

பயண தடையானது பொதுமக்களுடைய பாதுகாப்பினை உறுதி படுத்துவதற்காக தான் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவே பொதுமக்கள் இந்த பயணதடையினை அனுசரித்து செயற்பட வேண்டியது அவசியமாகும்

பொதுமக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல ஒன்றுகூடல் நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வுகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது

தற்போது யாழில் மதகுருமார் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவதை நிறுத்த வேண்டும்

பொது இடங்கள் அலுவலகங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக முக கவசத்தினை சரியான முறையில் அணிந்து செல்ல வேண்டும்

நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தேசிய ரீதியில் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கியிருக்கின்றோம் எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எமது மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியோர் எண்ணிக்கை பற்றி கோரி இருக்கின்றார்கள் அதனை நாங்கள் அனுப்பியிருக்கிறோம் அதன் அடிப்படையிலே யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் உட்பட சகல திணைக்கள உத்தியோகத்தர்களுமாக 3 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருக்கின்றோம் மிக விரைவில் அக் கோரிக்கை நிறைவேற்றப்படும்

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மேலதிகமான இரண்டு இடங்களை நாங்கள் புதிதாக ஆரம்பித்துள்ளோம் அதாவது வட்டுக்கோட்டை மற்றும் நாவற்குழி

நாவற்குழியில் 450 பேருக்கு மேற்பட்டோர் தங்க வைப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந்த அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம் அந்த வேலைகள் முடிவடைந்தவுடன் இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும் என தெரிவித்த அரச அதிபர்

இதைவிட 4 ஆதார வைத்திய சாலைகளில் ஒவ்வொரு விடுதிகள் நோயாளர்களை தங்க வக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அத்தோடு எமக்கு ஆளணி பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை முன்னரை விட தற்போது பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ள்ளது என தெரிவித்தார்

மட்டக்களப்பில் சட்டவிரோத தேக்கு மரக்குற்றிகள் பறிமுதல்(PHOTOS)

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல நரக்கமுல்ல அரசாங்க வனபகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்காக உழவு இயந்திரத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது மரக்குற்றிகள் ஏற்றபட்ட உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த உழவு இயந்திரத்தின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்கள்(PHOTOS)

0

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர நடமாட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை அடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதால் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொருட்களை கொள்வனவு செய்தனர்.
நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தை ஆகியனவற்றை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீண்டும் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் போது தேவையான மரக்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலங்கள், ஆளுநர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
சகல மொத்த, சில்லறை வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் இன்று இரவு முதல் பயணக்கட்டுப்பாடு

0

நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளது.

இருப்பினும் , 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து 19 மணிநேரத்திற்கு பயண தடை விலகிக் கொள்ளப்படும்.

அன்றிரவு 11 மணியிலிருந்து மீண்டும் அமுலுக்கும் வரும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இதற்கமைவாக அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இன்றிலிருந்து 24 ஆம் திகதி வரை சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.

25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும். பின்னர் மீண்டும் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

கொவிட் நெருக்கடிக்கு மத்தியல் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் தங்கியிருக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ட்ரெக்டர் வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயம்

0

42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ´ட்ரெக்டர்´ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற ட்ரக்டர் வண்டியே, கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ட்ரக்டர் வண்டியில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதி இருக்கும். அதன் பின்னர் உள்ள பகுதியிலேயே கொக்கி மூலம் பெட்டி பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை நிலவியது.

போயிங் விமான சேவையுடன் இணையும் ஶ்ரீலங்கன் விமான சேவை

0

ஶ்ரீலங்கன் விமான சேவை அமெரிக்காவின் போயிங் விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. விமானங்களை பராமரித்தல் விமான உபகரணங்கள் மற்றும் விமான உதிரிபாகங்களை பராமரித்தல் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக இலக்குகளை அடைந்து கொள்ளவது போன்ற நோக்கங்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலுள்ள இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் சுற்றுலா மையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சு இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நீர் மின்சாரம் வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ஹிக்கடுவ, பூஸ்ஸ, தல்பே, தெல்தூவ ஆகிய பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா

0

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று உயிரிழந்தவர்களில் 24 பேர் 71 வயதைக் கடந்தவர்கள்

0

2021 மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் (20) உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆகும்.

இறந்தவர்கள் உடுகித்த, லுனுகல, பலாங்கொட, கட்டுநாயக்க, பாந்துருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓய, பண்டார கொஸ்வத்த, பொரல்ல, பாதெனிய, தோரயாய, பொல்கஹவெல, கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதென்னவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், யட்டியாந்தோட்டை, பொல்கஹவெல, பெலிஹூல்ஒய, நேபட, கெக்குனுகொல்ல, நிக்கவெரட்டி, வரக்காபொல, அம்பிட்டி, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்களைக் கொண்டவர்கள்.

அவர்களில் 24 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர், 10 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்கிடைப்பட்டவர்கள், ஒருவர் 51 தொடக்கம் 60 வயதிற்கிடைப்பட்டவர், ஒருவர் 41 தொடக்கம் 50 வயதிற்கிடைப்பட்டவர், ஏனைய இருவரும் 31 தொடக்கம் 40 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.

கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் மரணங்களுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களாவதுடன், ஏனையோர் ஆண்களாவர்.