24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

CID யில் வாக்குமூலம் வழங்குமாறு தாம்புகலவுக்கு உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு வர்த்தகர் விரஞ்சித் தாம்புகலவுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.பணமோசடி வழக்கில் விரஞ்சித் தாம்புகல சந்தேக நபராக பெயரிடப்படாததால் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக உண்மைகளை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன் காரணமாக விரஞ்சித் தாம்புகல மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என கடுவெல நீதவான் தெரிவித்தார்.இதன்படி எதிர்வரும் திகதியில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஆஜராகுமாறு விரஞ்சித் தாம்புகலவுக்கு அறிவிக்கப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles