வேலையற்ற பட்டதாரிகள் ஜே.வி.பி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

0
4

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். 

சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த கொள்கையினையும், வாக்குறுதிகளையும் தற்போது மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 

தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும், கொள்கை பிரகடன அறிக்கை மூலம் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.