ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணியின் 32ஆவது தியாகிகள் தினம் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை அக்கரைப்பற்று பாவேந்தர்
சனசமூகநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான
வி.ஜெயகோபன் ஏ.எம்.சலீம் முத்துலிங்கம் வரதராஜன் ஸ்ரீ மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய தலைவர் வி.புண்ணியமூர்த்தி ஆலய திருப்பணிச்சபை உறுப்பினர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனபலரும் கலந்துகொண்டனர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான கே.சின்னையா உள்ளிட்டவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம்பற்றி கருத்து வெளியிட்டார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.