அக்கரைப்பற்றில் வரலாறு காணாத
வகையில் எரிபொருளுக்காக காத்திருப்பு

0
350

அக்கரைப்பற்று ஹினுஅப்புகாமி அன் சண்ஸ் எரிபொருள் வழங்கும் நிலையத்தில் வரலாறு காணாத வகையில் வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கிருக்கின்றன.

நூற்றுக்கணக்கான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டமோட்டார் சைக்கிள்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதுடன் நேற்று காலைமுதல் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் உணவு சமைத்து உண்பதையும் சிலர் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.

அரசஉத்தியோகத்தர்கள்,விவசாயிகள்,வியாபாரிகள்,ஆட்டோசாரதிகள் என நூற்றுக்கணக்கானமக்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் காத்திருப்பதுடன் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தை விமர்ச்சித்து வருகின்றனர்.