அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அறுவடை பொங்கல் நிகழ்வு
நேற்று இடம்பெற்றது.
ஆலய நிர்வாக சபையினர், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பளிப்புக்களோடு வரலாற்றில் முதல் தடவையாக கொள்வனவு செய்யப்பட்ட வயல் நிலத்தில்
மேற்கொள்ளப்பட்ட முதலாவது அறுவடையின் பின்னர் இடம்பெற்ற பொங்கல் விழாவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆலய தலைவர் பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்
ஆலயங்களின் தலைவர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
பொங்கலோடு ஆரம்பமான நிகழ்வில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பின்னர் பூமிக்கு பால்வார்க்கும் சடங்கும் நடைபெற்றது.
பூஜை வழிபாடுகளை ஆலய உற்சவகால பிரதமகுரு சிவத்திரு இ.யோகானந்தம் குருக்கள் உள்ளிட்ட குருமார்களினால் நிகழ்;த்தப்பட்டன.