28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அதிகூடிய அபாயமுடைய பகுதிகள் எவை?

அதிகூடிய அபாயமுடைய பகுதிகள் என, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை மற்றும் கிளிநொச்சியில் கண்டாவளை ஆகிய பகுதிகளும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவால், இன்று பிற்பகல், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில், அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலவரத்தின் அடிப்படையில், இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் பிரிவுகளுக்கேற்ப, இவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, அதிகூடிய அபாயமுடைய பகுதிகள் என, யாழ். மாவட்டத்தில் வேலணை மற்றும் கிளிநொச்சியில் கண்டாவளை ஆகிய பகுதிகளும், வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில், புத்தளம், ஆனைமடு மற்றும் முந்தளம் ஆகிய பகுதிகள் அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தளையில் பஸ்கொட மற்றும்; பெல்லேபொல, வில்கமுவ என்பனவும், அம்பாறை மாவட்டத்தில் மகாஓயாவும், அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தில், மெதகம அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில், மாவனெல்ல மற்றும் ரன்வெல, கண்டியில் யட்டிநுவர மற்றும் கங்காவத்த, நுவரெலியாவில் பம்பரதெனிய ஆகியவை, அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில், குளியாபிட்டி, நாரம்மல, பன்னல, அலவ்வ மற்றும் பொல்கஹாவெல என்பன, அபாயமுடைய பகுதிகளாகும்.
கம்பஹாவில் மீரிகம, திவுலபிட்டி, கட்டான, சீதுவ, மினுவாங்கொடை, வத்தளை, ஜா-எல, அத்தனகல, வேயாங்கொடை, கம்பஹா, றாகம, களனி, தொம்பே, பியகம, கிரிந்திவெல மற்றும் பூகொடை ஆகியவை, அபாயமுடைய பகுதிகளாகும்.
கொழும்பில், கடுவலை, கொத்தொட்டுவ, கொலன்னாவை, பத்தரமுல்ல, புறக்கோட்டை, நாவல, கஹதுட்டுவ, பிலியந்தல மற்றும் வத்துவ ஆகிய பகுதிகள் அபாயமுடையவையாகும்.
களுத்துறையில் மத்துகம, அம்பாந்தோட்டையில் சூரியவெளி ஆகிய பகுதிகள் அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles