அனர்த்த முன்னெச்சரிக்கை, சுகாதாரம் தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்குச் செயலமர்வு

0
152

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதாரம் தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு
இன்று ஆரம்பமாகியது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இலங்கை குடும்ப திட்ட சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில்
மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெறுகின்ற மூன்று நாள் செயலமர்வில்
வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ், இலங்கை குடும்ப திட்ட சேவைகள் சங்கத்தின் தலைமை காரியாலய பிரதி பணிப்பாளர்
தக்சலா கமகே, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலக உத்தியோகத்தர்கள் பயிற்சியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.