அன்னை பூபதியின் 35வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படும் நிலையில், அன்னை பூபதி, உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில்
அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியின் குடும்ப உறவுகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கொண்ட அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் முன்னெடுப்பில்
இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர்
போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களிலிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் அன்னை பூபதி உயிர்நீர்த்து 35வருடத்திற்கு பின்னர் அவருக்கு திதி வழங்கும் நிகழ்வு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணி அருகில் நடைபெற்றது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினருமான முரசொலிமாறன் குருக்கள் தலைமையில்
அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
Home கிழக்கு செய்திகள் அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் அடையாள உண்ணாவிரதம்