அமரர் சிவசிதம்பரத்தின் 100வது ஜனன தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி சவாரிப் போட்டி

0
191

அமரர் சிவ சிதம்பரத்தின் 100வது ஜனன தினத்தை முன்னிட்டு கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்று பிற்பகல் சோனப்பு மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி நடத்தப்பட்டது.

கரவெட்டி அபிருத்தி ஒன்றியத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதன் போசகரும் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் ஆ.கேதிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

போட்டிகளில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்புட்ட முதல் மாட்டு வண்டிகளுக்கே பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வட மாகாணத்தின் பல்வெறு பகுதிகளைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் போட்டியில் பங்குபற்றியிருந்தன.