அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் இன்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்டார்.
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இதன்போது கடற்றொழில் வள அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சு, கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்துள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் குறித்தும் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது விமர்சனங்களை முன்வைத்தார்.