அம்பாறை சம்மாந்துறையில் கசிப்புடன் இருவர் கைது

0
15

வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான 2 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மல்வத்தை பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அதிகளவான கசிப்பு கலன்களுடன் நேற்றைய தினம், 45 மற்றும் 69 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் வசமிருந்து 23 ஆயிரம் மில்லி லீட்டர்கள் கசிப்பு சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரால்
கைப்பற்றப்பட்டது. கைதான இரு சந்தேக நபர்களும் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சம்மாந்துறை ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.