அம்பாறை திருக்கோவிலில் இல்மனைட் அகழும் முயற்சிக்கு எதிர்ப்பு!

0
121

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தாண்டியடி முதல் தம்பட்டை வரையான பகுதிகளில்
இல்மனைட் அகழ்ந்து அதனை எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இல்மனைட் அகழ்வுடன் தொடர்புடை நிறுவனம், திருக்கோவில் பிரதேச சபைக்கு இல்மனைட் அகழ்ந்து அதனைக் கொண்டு
செல்வதற்கான பாதை அனுமதிப் பத்திரம் எடுப்பதற்காக வருகை தந்த போது, இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.