அம்பாறை திருக்கோவில் மண்டானை கிராமத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

0
11

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 மண்டானை கிராமத்தில் வீடற்று வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு காணியுடன் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஒழுங்கமைப்பில், பிரதேசசெயலாளரால் காணிகள் வழங்கப்பட்டு தலா ஒரு வீடு 10 இலட்சம் என்ற பெறுமதியில் இரண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது

திருக்கோவில் 04 மண்டானை கிராமத்தில் வீடு இல்லாது வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக கனடா சீடர்ஸ் அன்புநெறி அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் 25 வீடுகளை கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 12 வீடுகள் நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா சீடர்ஸ் ,அன்பு நெறி அமைப்பின் இணைப்பாளர் நந்தன் கிராம சேவை உத்தியோகத்தர் சுதன் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முரளிதரன், சமுர்த்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.