அம்பாறை திருவதிகை கலைக்கூடத்தினால் கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது

0
83

அம்பாறை திருவதிகை கலைக்கூடத்தினால் ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ எனும் தொனிப் பொருளில் திருக்கோவில் பிரதேச கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
சமூக சேவையாளர்கள் ஆகியோரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.
பேராசியரும் திருவதிகை கலைக்கூடத்தின் ஆலோசகருமாக கலாநிதி எஸ்.குணபாலன் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பாராதியாரின் 141ஆவது ஜனன தினத்தினை
ஒட்டியதாக திருவதிகை சஞ்சிகை அறிமுக விழாவும் இடம்பெற்றது.
ஆன்மீக அதிதியாக இந்தியாவைச் சேர்ந்த சுவாமி நிதியானந்தா மகாராஜ் ரிசிகேஸ் பங்கேற்றதோடு,
பிரதம அதிதியாக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்ககழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராசா,
திருக்கோவில் பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன், கல்வியாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள்
கலந்து கொண்டனர்.