பிரதமர் மகிந்தராஜபக்சவின் வேண்டுகோளுக்கமைய இந்து சமயகலாசாரஅலுவல்கள் திணைக்களத்தினால் நாட்டையும், நாட்டு மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டி இந்து ஆலயங்களில் விசேட யாகம் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய நேற்று கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் விசேடயாகம் மற்றும் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் வழிபாட்டில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், பிரதேசத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு படையினர், ஆலய வண்ணக்கர் எனப் பலர் கலந்துகொண்டனர்.