இசுருபாய கட்டட அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட இசுருபாய நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் உள்ள இராஜாங்க கல்வி சீர்திருத்த அமைச்சின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளராக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டார் .
இந்நிலையில், கல்வி அமைச்சின் இசுருபாய அலுவலக வளாகத்தை தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்காக மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடிவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் அவர்களின் உதவியால் குறித்த வளாகத்தில் தொற்று நீக்கல் பணிகள் பூர்த்தியாகி விட்டன.
இந்நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.