இணையத்தளத்தினூடாக மதுபானம் விற்பதற்கான யோசனை அமைச்சுக்கு முன்வைப்பு

0
177

பல்பொருள் அங்காடிகளினூடாக இணையத்தளம் மூலம் நுகர்வோருக்கு மதுபானத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு நிதி அமைச்சுக்கு மதுவரித் திணைக்களம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் பல்வேறுத் தரப்பினரும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைத்து வருவதாகவும் இதனைக் கருத்திற்கொண்டே இணையத்தளம் மூலமாக மதுபானத்தை விற்பனை செய்வதற்கான கோரிக்கைகயை முன்வைத்துள்ளதாகவும் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சிடமிருந்து அதற்கான நிபந்தனையுடனான அனுமதி கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயணத்தடை அமுலிலுள்ளதால் பலர் தங்களது சொந்த வீடுகளில் மதுபானங்களை தயாரிப்பதற்கு ஆரம்பித்துள்ளனர் என்றும் இதனால் நீண்டகாலத்துக்கு அரசாங்கம் வருமானத்தை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.