31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கை-இந்தியா- மாலைதீவு கூட்டுப் பயிற்சியில்

கடல்சார் பாதுகாப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக, இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கையைச் சேர்ந்த கடலோர காவல்படை வீரர்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கடல்சார் சவால்களை அடையாளம் காண நான்கு நாள் முத்தரப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படையின் சமர்த், ஐசிஜிஎஸ் அபினவ் மற்றும் இலங்கை கடற்படையின் சமுதுரா ஆகிய கப்பல்கள் பெப்ரவரி 22 முதல் 25 ஆம் திகதிக்கிடையில் நடைபெறும் ‘தோஸ்தி-16’ பயிற்சிக்காக கடந்த வியாழன் அன்று மாலேவை சென்றடைந்தன.

வங்காளதேசம் இதில் பார்வையாளர் நாடாக பங்கேற்கிறது.

கடலோர பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஐசிஜிஎஸ் டோர்னியர் முத்தரப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக பங்கேற்கிறது.

இந்திய கடலோர காவல்படையின் மேலதிக இயக்குநர் ஜெனரல் ஏடிஜி எஸ் பரமேஸ் கடந்த வியாழக் கிழமை VIA க்கு வந்தவுடன் மாலைதீவு தேசிய கடலோர காவல்படையின் தளபதி கேர்னல் முகமது சலீம் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தார்.

‘இரண்டு ஐசிஜி கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் MNDF CG  இன் தளபதியை அழைத்து, கூட்டுறவு ஈடுபாடுகளின் பரஸ்பர வழிகளைப் பற்றி கலந்துரையாடியதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஐசிஜி கப்பல்கள் தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்பதோடு இலங்கை கடலோர காவல்படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையுடன் கூட்டு கடல் பயிற்சியிலும் பங்கேற்கிறது.

இந்தியா-மாலைதீவு-இலங்கை முத்தரப்புப் பயிற்சியான ‘Dosti- 16’ ‘கடல் பாதுகாப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒருங்கிணைப்பு என்று மாலைதீவில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தோஸ்தி பயிற்சியானது இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கையின் கடலோரக் காவல்படை வீரர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நட்பை வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கை கூறியுள்ளது.

முன்னதாக ‘இவ்வகையான பயிற்சிகளில் இலங்கை கடற்படை பங்கேற்பதானது பிராந்தியத்தில் உள்ள ஏனைய கடல்சார் பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பையும், ஒற்றுமையையும் மேம்படுத்துவதோடு, மேலும் கடல்சார் செயல்பாடுகள் பற்றிய புதிய அறிவைப் பெறுவதற்கும், உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கடல்சார் சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு ஒத்துழைப்புடன் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பல நன்மைகளை வழங்கும் என இலங்கை கடற்படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles