இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்கவே இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுக்கு சீனா கடன்களை வழங்கியுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு, தெற்கசியாவில் வளர்ச்சி பணிகளுக்கு கடன் என்ற பெயரில் பெரும் தொகையை சீனா வழங்குகிறது. இதன்மூலம் இந்த நாடுகளில் – இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க அந்த நாடு விரும்புகிறது என இந்தியாவின் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் இந்திய பொலிஸ் சேவை உயர் அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடந்த மாநாட்டின் முடிவிலேயே இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவின் உயர் பொலிஸ் அதிகாரிகள் சமர்ப்பித்த நாடுகளில், ‘இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளில் உட்கட்டமைப்பு மற்றும் பிற நிதி உதவிகள் என்ற பெயரில் சீனா பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அத்துடன், சீனா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது’ எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி பயங்கரவாதத்தை சீனா ஊக்குவிப்பதாகவும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home முக்கிய செய்திகள் இந்து சமுத்திரத்தில் இந்திய ஆதிக்கத்தை குறைப்பதற்கு தெற்காசிய நாடுகளுக்கு கடன் வழங்கும் சீனா