இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0
85

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளநிலையில், இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.