இயல்பு நிலைக்குத்திரும்பும் வவுனியா,கிளிநொச்சி

0
31

வவுனியாவில் வெள்ளநீர் வடிந்தோடிவருவதால், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.வவுனியாவில் மழை குறைந்தமையால் தாழ்நிலப்பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வடிந்தோடிவருகிறது. இதனையடுத்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பல்வேறு பகுதிகளிலும் இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது.

தற்போது மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதனால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து நீர் வடிந்தோடி வருகின்றது.இந்தநிலையில், வெள்ளப்பாதிப்பால் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றது.