பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் புதிய பணிமனையொன்று மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேசத்தில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
மக்களின் சேவையை இலகுபடுத்தி மக்களின் காலடிக்கு கொண்டுவரும் நோக்குடன் ஆரையம்பதி, செங்குந்தர் வீதியில் இப்பணிமனை திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.