நாட்டில் இன்றும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 492ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 563 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 7 ஆயிரத்து 373 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் நேற்றும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இன்றும் 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.