இலங்கையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெற்றி!

0
95

உலகில் மிகவும் சுவையான அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தரத்திலும் சுவையிலும் சிறந்த மற்றும் உலகின் மிகவும் சுவையான அன்னாசி வகையில் ஒன்றான எம்.டி 2 அல்லது சூப்பர் ஸ்வீற் பைன் அப்பிள் ஐ இலங்கையில் பயிரிடுவதற்கான பரிந்துரைகளை விவசாய திணைக்களம் வழங்க உள்ளது.
விவசாயிகளும் இந்த அன்னாசி வகையை பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசி பழங்களுக்கு உலக சந்தையில் சிறந்த வரவேற்பும், அதிக தேவையும் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.