29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கவில்லை- மைக்பொம்பியோவிடம் தெரிவித்தார் கோத்தபாய

இலங்கை சீனாவின கடற்பொறிக்குள் இல்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
மைக்பொம்பியோவுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்ச்சியாக கடன்களை பெற விரும்பவில்லை அதிகளவு வெளிநாட்டு முதலீட்டினை பெறுவதன் மூலம உயர்ந்த பொருளாதார வளர்ச்சியையே இலங்கை அடைவதே இலங்கையின் நோக்கம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஏற்கனவே வெளிநாட்டு முதலீட்டிற்கு பாதகமாக உள்ள அதிகார வர்க்க தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் விவசாய துறையில் உயர்ந்த அபிவிருத்தியை காண்பதற்கான அவசியமான விடயங்கள் இலங்கையிடம் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி இலங்கை நடுநிலைமையான நாடு என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக்காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
புpரிவினைவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது எனபதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles