இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்கு முயற்சி

0
77

பதுளை ஹெரமிட்டிகல தோட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஹெரமிட்டிகல தோட்டத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக செல்வதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக, குறித்த தோட்டத்துக்கு அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தமது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து வாகனம் செல்ல தடைசெய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.