இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அமெரிக்காவுடனும் ஏனையநாடுகளுடனும் இலங்கை உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க அமைச்சருடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகின்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.