இளம் குடும்பஸ்தர் கொலை: தலைமறைவான சந்தேகநபர் கைது!

0
120

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர, வடக்கிமலை தோட்டத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரு குடும்பங்களுக்கு இடையில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன், கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின்னர் நேற்று (09) கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரவித்தனர்.

சந்தேகநபர் இன்று (10) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.