பாராளுமன்றத் தேர்தலில் ஈ. பி. டி. பி. சார்பில் போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்சாரின் வீட்டின் மீது நள்ளிரவில் கழிவு ஒயில் வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து அன்சார் கூறுகையில், “தனக்கு அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் செய்ததாகவும் பின்னர் இவ்வாறு வீட்டின் மீது மேற்கொண்ட கழிவு ஒயில் தாக்குதலில் வீட்டின் நுழைவாயில் உட்பட சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதுதவிர முகநூலில் சில தவறான விடயங்களை உட்செலுத்தி சில நபர்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.