உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் போன்ற சட்டமூலங்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகவும் அவசியமான சட்டமூலங்களாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
‘2018ஆம் ஆண்டு இந்த சட்டமூலத்தை அமைச்சரவைக்கு முன்வைத்தோம். இந்த சட்டமூலத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும்போது தற்போது எதிர்க்கட்சியிலிருக்கின்ற அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் இருந்த சஜித் பிரேமதாஸ, லக்ஷ;மன் கிரியெல்ல, ராஜித சேனாராத்ன, அசோக்க அபேசிங்க, சரத் பொன்சேக்கா உள்ளிட்ட சகலரும் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்திருந்தனர்
இந்த சட்டமூலத்துக்கு தற்போது ஒரு சிலர் எதிர்ப்பை தெரிவிப்பார்களேயாயின், 2018ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் அதேபோன்று 2023ஆம் ஆண்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இரண்டு சட்டமூலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
இதில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் அது எவ்வாறான மாற்றம் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றார்.