மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, உயரம் குறைந்த படிகளையுடைய பேருந்துகளை ஒரு சில வழித்தடங்களிலாவது சேவையில் ஈடுபடுத்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி, பேராசிரியர் சி. ரகுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் ரகுராம் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், சமூகத்தின் நாடித்துடிப்பை அறிந்த ஒருவர். ஒடுக்கப்படும் சமூகத்தின் குரலாக அவர்களின் கரிசனையின்பால் அக்கறை கொண்ட ஒருவராக அறியப்பட்டவர். மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஆளுநர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புகின்றேன்- என்றார்.