தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு காரணத்தால் புதுக்கடையில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழங்குகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கான அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஒத்திவைப்பட்ட வழக்குகளின் விசாரணை தினம் குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒத்திவைப்பட்ட வழக்குகளின் விசாரணை தினம் குறித்த தரப்பினருக்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.