அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது ருவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜனாதிபதி ஜோ பைடன், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர் பார்க்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.